மதுரையில் நியாயவிலைக் கடையில் வினியோகம் செய்யப்படும் பொருட்களை கடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னகரம் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என புகார் எழுந்தது.
இந்நிலையில் ரேஷன் கடையில் உள்ள பொருட்களை மினி ஆட்டோவில் ஊழியர் ஒருவர் கடத்தும் வீடியோ வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நியாய விலைக்கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.