தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், உதகைக்கு வரும் சுற்றுலா பயணகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள நாடுகாணி, சோலாடி, பாட்ட வயல், நம்பியார் குன்னு, தாளூர் ஆகிய சோதனை சாவடிகளிலும் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் காய்ச்சல், இருமல், சளி, உள்ளனவா என பரிசோதித்த பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் முகக்கவசம் அணிந்து வருமாறு மருத்துவ குழுவினர் அறிவுறுத்தி வருகின்றனர்.