காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ண ராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
அணைக்கு நீர்வரத்து 35 ஆயிரத்து 391 கன அடியாக உள்ள நிலையில் வினாடிக்கு 11 ஆயிரத்து 229 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மழை பெய்து வருவதால் பல்வேறு அணைகள் நிரம்பி வருகிறது. அந்த வகையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து மொத்தம் 36 ஆயிரத்து 299 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.