போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி, தனியார் பொறியியல் கல்லூரிகள் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.
தனியார் பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெறும் நோக்கில், தங்களது கல்லூரிகளில் பல பேராசிரியர்கள் பணியாற்றுவதாக கணக்கு காட்டியதாக புகார் எழுந்தது. அதிலும் கடந்த 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் 211 பேராசிரியர்கள் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்தது தெரியவந்தது.
நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 500 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதன் வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.