டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், திகார் சிறையில் இருந்தவாறு காணொலி வாயிலாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 8-ஆம் வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.