குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆசிரியராக மாறி மாணவர்களுடன் கலந்துரையாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்குச் சென்ற குடியரசுத் தலைவர், மாணவர்களுக்கு நற்சிந்தனைகளை போதித்தார்.
தொடர்ந்து, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். ஒடிசாவில் பிறந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பள்ளி ஆசிரியராக தனது வாழ்வைத் தொடங்கியது நினைகூரத்தக்கது.