கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியில் அரிவாளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருவந்திபுரம் பகுதியில் இருந்து கம்மியம்பேட்டை வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றுகொண்டிருந்தனர்.
கஞ்சா போதையில் சென்ற இருவரும் அரிவாளை கையில் வைத்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தினர். அப்போது அவ்வழியாக சென்றுகொண்டிருந்த பிரகாஷ் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட சூர்யாவை கைது செய்த நிலையில் மற்றொருவரை தேடி வருகின்றனர்.