கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக தென்காசி மாவட்டம் புளியரையில் சோதனை சாவடியில் 24 மணி நேரமும், கேரளாவில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
காய்ச்சல் தவிர ஏனைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட வௌவால், பன்றி மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடி தொடர்பு இருப்பவர்களுக்கும் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.