கார்கில் போரின் 25-ஆவது வெற்றி விழாவையொட்டி, லடாக்கின் டிராஸ் நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதுமிருந்து 2 ஆயிரம் வாழ்த்து மடல்களை மாணவர்கள் அனுப்பி, நன்றி தெரிவித்தனர்.
கடந்த 1999-ஆம் ஆண்டில் கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தை அடுத்து நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது.
கார்கில் போரின் 25-வது ஆண்டு விழா நாளை கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதால், விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.