தெலங்கனா சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல்தெலங்கானா சட்டப் பேரவையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில துணை முதல்வரும் நிதியமைச்சருமான பத்தி விக்ரமார்க்க மல்லு தாக்கல் செய்தார்.
தெலங்கனாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 2023-24 நிதியாண்டில் 14 லட்சத்து 63 ஆயிரத்து 963 கோடியாக பதிவானதாகவும், இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 11.9 சதவீதம் அதிகம் என்றும் பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் பத்தி விக்ரமார்க்க மல்லு குறிப்பிட்டார்.
மத்திய அரசின் பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தில் தெலங்கானாவும் இணைந்து, பயிர்க் காப்பீடு திட்ட பயன்பாடுகள் மாநில விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அவர் அறிவித்தார்.
சன்னா ரக அரிசி உற்பத்தியை ஊக்குவிக்க முடிவு செய்திருப்பதாக கூறிய நிதியமைச்சர் பத்தி விக்ரமார்க்க மல்லு, விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 500 ரூபாய் போனஸ் அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.