முன்னாள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பிறந்த தினத்தையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், சோம்நாத் சாட்டர்ஜி உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி கடந்த 2018-ஆம் ஆண்டில் காலமானது குறிப்பிடத்தக்கது.