கனமழை காரணமாக மகாராஷ்டிர மாநிலம் மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்கட் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இடைவிடாத மழையால் மும்பையிலிருந்து விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, பயணிகளுக்கு டிக்கெட்டுக்கான கட்டணம் திருப்பியளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, புனேயில் குடியிருப்புப் பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால், 76 பேரை படகில் சென்று தீயணைப்பு படையினர் மீட்டு முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
புனேயில் வரலாறு காணாத மழையால் வாகனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.