பட்ஜெட்டுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கிய நிலையில், அதில் விளிம்புநிலை மக்களுக்காக இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களை விளக்கி, நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், ஏழைகள், விவசாயிகள், பட்டியலின மக்கள், சிறுகுறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களை விளக்கும் வகையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.
மேலும், மத்திய அமைச்சர்களும், பாஜக நிர்வாகிகளும் மக்களை சந்தித்து பட்ஜெட் குறித்து விளக்கமளிக்கின்றனர். குறிப்பாக பாஜக எம்.பி.க்கள் மாவட்ட வாரியாக சென்று பட்ஜெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென ஜெ.பி.நட்டா அறிவுறுத்தியதாக கட்சியின் பொதுச் செயலர் அருண் சிங் தெரிவித்துள்ளார்.