தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உரிய உபகரணங்கள் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெரியகுளம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் சுமார் 120 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வடகரை வைத்தியநாதபுரம் செல்லும் சாலையில் உள்ள சாக்கடைகளில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கை உறை, கால் உறை என எந்த உபகரணங்களில் இன்றி பணியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால், தூய்மை பணியாளர்களுக்கு உரிய உபகரணங்கள் நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.