ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பொங்கல் உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.
கோரப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த 1-ம் தேதி கொடியேற்றம் நடத்தப்பட்டு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஏராளமான பக்தர்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்தும், தீக்குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.