குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மற்றும் அசோகா அரங்குகளின் பெயர் முறையே கணதந்திர மண்டபம் மற்றும் அசோக மண்டபம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
தர்பார் அரங்கில் விருது வழங்கும் நிகழ்ச்சியும், அசோகா அரங்கில் நடன நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் சூட்டப்பட்ட தர்பார் என்ற சொல் மன்றம் அல்லது பேரவையை பிரதிநிதித்துவப்படுத்துவதால், குடியரசை சுட்டும் கணதந்திர என விருது வழங்கும் அரங்குக்கு மறுபெயரிடப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிக்கை வெளியாகியுள்ளது.