சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்வதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
குடியரசுத்தலைவராக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் பணிகளை தொடங்கியிருக்கும் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
பெருமைமிகு நம் பாரத தேசத்தில் 15-வது குடியரசுத்தலைவராக அவர் தேர்வானது மூலம், உலக அரங்கில் பெண்ணுரிமையை வலிமையாக நிலைநாட்டிய குடியரசு நாடாக இந்தியா மிளிர்ந்துகொண்டிருக்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.