தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனை ஒட்டி நாளை காலை 5 மணிக்கு, முதல் திருப்பலியும், காலை 7 மணிக்கு மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து காலை 8.30 மணியளவில் பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்படுகிறது. இந்த திருவிழா வரும் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.