தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோயிலில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் சாமி தரிசனம் செய்தார்.
சங்கரநாராயண சாமி கோயிலின் ஆடித்தபசு திருவிழாவின் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சசிகுமார் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார்.
பின்னர், கோவிலில் அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், போட்டிபோட்டு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.