ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் அண்ணன் குடும்பத்தாரை கொலை செய்த நபர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முனி ரெட்டி நகரை சேர்ந்த தாஸ், தனது மனைவி சுனிதா மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தாஸுக்கும், அவரது தம்பியான மோகனுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
இதனிடையே தாஸின் வீட்டுக்கு சென்ற மோகன், அண்ணன் தாஸின் மனைவி சுனிதா மற்றும் இரு மகள்களையும் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதனையடுத்து தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.