புதுச்சேரியில் மருந்து கொள்முதல் விவகாரம் தொடர்பாக அம்மாநில சுகாதாரதுறை இயக்குநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
புதுச்சேரி சுகாதாரத்துறை அலுவலகத்தில் மருந்துகள் கொள்முதல் செய்வதில் ஊழல் நடைபெற்றதாக சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன.
இதைத் தொடர்ந்து அம்மாநில லஞ்ச ஒழிப்புதுறை உதவியுடன் சென்ற சிபிஐ குழு அங்கு சோதனை நடத்தியது. 3 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.