மிசோரம் மாநிலம், ஐஸ்வால் நகரில் சமூக வானொலி மையத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்தியாவின் 500-வது ‘APNA RADIO 90.0 FM’ என்ற சமூக வானொலி மையத்தினை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மிசோரம் முதலமைச்சர் லால்துஹோமாவுடன் இணைந்து திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் திட்டங்களை முன்னெடுத்து செல்வதிலும், சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும், இந்த சமூக வானொலி மையம் முங்கியப் பங்காற்றும் எனவும் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.