மகளிருக்கான இலவசப்பேருந்து திட்டத்தில் இதுவரை 450 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனால் பெண்கள் மாதம்தோறும் 888 ரூபாய் சேமிப்பதற்கு வழிவகை செய்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதத்தில் விடியல் பயணம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்துகளை அடையாளம் காண்பதற்காக பேருந்துகளில் பிங்க் நிற வண்ணம் பூசப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.