அபுதாபியில் வசிக்கும் அமீரகத்தை சேர்ந்த ராஷித் யூசுப் அல் ஹம்மாதி தனது வீட்டையே அருங்காட்சியகமாக மாற்றி உள்ளார்.
இந்த அருங்காட்சியகம் மறைந்த அமீரக அதிபர் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் 17 பழங்கால கார்கள், 100 ஆண்டு பழமையான புத்தகம், பாஸ்போர்ட், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய பாரம்பரிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம் என ராஷித் யூசுப் அல் ஹம்மாதி தெரிவித்துள்ளார்.