உக்ரைன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சீன பயணத்தின் போது, அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்த குலெபா உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் பட்சத்தில் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி-ஐ சந்தித்த குலெபா, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.