பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்குடன் சண்டையிடத் தயாராக இருப்பதாக எலான் மஸ்க் மீண்டும் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த நேரத்திலும், எந்த விதிகளின் கீழும் அவரை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கேப்பிட்டல் ஹில்லில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றும் நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்த எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு எலான் மஸ்க், மார்க் ஜூக்கர்பெர்க் இடையேயான நகைச்சுவை பதிவுகள் இணையத்தில் கவனத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.