நேபாளத்தில் விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில், விமானி மட்டும் எவ்வாறு உயிர் பிழைத்தார் என்பதற்கான காரணங்கள் தற்போது தெரியவந்துள்ளன.
விபத்துக்குள்ளான விமானத்தை மனிஷ் ரத்ன ஷக்யா எனும் விமானியே ஓட்டிச் சென்றுள்ளார். இவர் விமானத்தை இயக்குவதில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் பெற்றவர் ஆவார்.
விமானம் விபத்துக்குள்ளான போது காக்பிட் பகுதி கீழே விழுவதற்கு முன்னதாகவே, விமானத்தின் மற்றொரு பகுதி கீழே விழுந்து தீப்பிடித்துள்ளது. பின்னர் தனியே விழுந்துகிடந்த காக்பிட்டிலிருந்தே விமானி படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.