புதன் கிரகத்திற்குள் மிக அதிக அளவில் வைரம் இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதன் கிரகத்தின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பதாகவும், இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள்14 கிலோ மீட்டர் தடிமனில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், புதன் கோளில் உள்ள வைரத்தை சுலபமாக வெட்டி எடுக்க சாத்தியம் இல்லை என்று ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற அறிவியல் இதழில் தகவல் வெளியாகியுள்ளது.