மதுரையில் ஆம்னி பேருந்து ஓட்டுநரை கையை கட்டி போட்டு தாக்கிய பேருந்து உரிமையாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் மீது மாட்டுத்தாவணி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை நீர்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகருப்பையா. இவர் மதுரை மாட்டுத்தாவணிக்கு ஆம்னி பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது, பேருந்து உரிமையாளர் ராஜசேகர், பணத்தைக் கையாடல் செய்ததாக கூறி பால கருப்பையாவின் கையை கட்டுப்போட்டு, நிறுவன ஊழியர்களுடன் சேர்ந்து சரமாரி அடித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஓட்டுநர் பாலகருப்பையா மாட்டுத்தாவணி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ், பேருந்து உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.