மிக உயரிய விருதுகளில் ஒன்றான ‘டாப் சேஃப்டி பிக்’ எனும் விருதை கியா EV9 காருக்கு நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான காப்பீட்டு நிறுவனம் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பான பயணங்களுக்காக பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது. மிகுந்த கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக பிரீமியம் அம்சங்களை கொண்ட எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடலான கியா EV9 விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என நம்பப்படுகிறது.