டெல்லியில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. நௌரோஜி நகர், சாந்தி பாத் உள்ளிட்ட இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியது.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சுரங்கப்பாதைகளில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு தொடர்பான விவரங்களைப் போக்குவரத்து போலீசார் சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தெரிவித்து வருகின்றனர்.