விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்படும் என நாசா மற்றும் போயிங் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த ஜூன் 5-ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றார்.
கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் ஜூன் 7-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். கடந்த 13-ம் தேதியே பூமிக்கு திரும்ப வேண்டிய சுனிதா மற்றும் புட்ச் தொழில்நுட்ப காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இவர்களை மீட்கும் முயற்சியில் நாசா மற்றும் போயிங் நிறுவன பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விண்கலம் சரிசெய்வது கடினமாக உள்ளதாகவும் எனவே அவர்கள் செப்டம்பர் மாதத்தில் பூமி திரும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.