விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பெண்களை ஏற்றாமல் அதிவேகமாக சென்ற அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி வழியாக காரைக்குளம் வழித்தடத்தில் செல்லும் அரசு நகர பேருந்து பள்ளிமடம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பேருந்தை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடத்துனர் மண்வெட்டி போன்ற பொருட்களை கொண்டு வந்தால் பேருந்தை நிறுத்த மாட்டோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. .