தேனி மாவட்டம் போடி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேல சொக்கநாதபுரம் அரசு பொறியியல் கல்லூரி அருகே இராணிமங்கம்மாள் சாலையில் டாஸ்மாக் மற்றும் தனியார் பார் இயங்கி வருகிறது.
கடந்த ஆண்டு டாஸ்மாக் கடை அகற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அப்பகுதியில் கடை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அச்சமடைந்தனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.