நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் நியாய விலைக்கடையை சேதப்படுத்துச் சென்ற யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மசினகுடி கிராமப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, கிராம பகுதியில் இருந்த நியாய விலைக் கடையை சேதப்படுத்தியதுடன், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களையும் சூறையாடியது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்தனர்.