திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் பணத்தை திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மகாலட்சுமி நகரைச் சேர்ந்த இளஞ்செழியன், மனைவி சுகுணா மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். இரவு நேரத்தில் சுகுணா, கீழ் வீட்டிலும், இளஞ்செழியன் தனது மகன்களுடன் மாடியிலும் படுத்து உறங்கியுள்ளனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் கதவு பூட்டை உடைத்து 30 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை களவாடிச்சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.