நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் அட்டகாசம் செய்துவரும் கரடியை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மலையடிவார கிராமமான அனவன் குடியிருப்பில் அடிக்கடி காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் நுழைந்த கரடி, அங்குள்ள வாழைக் கன்றுகளை சேதப்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் சோலார் மின் வேலி அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.