ராமநாதபுரம் மாவட்டம் பட்டினங்காத்தான் அருகே அரசுப் போக்குவரத்து கழக அதிகாரி வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிருந்தாவன் கார்டனை சேர்ந்த சகாதேவன், இவர் வீட்டை பூட்டிவிட்டு அலுவலக வேலையாக வங்கிக்கு வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் வீட்டை நோக்கி திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டுக்கு வெளியே கார் நிற்பதையும், வீட்டிலிருந்து மர்ம நபர் காருக்குள் ஏறி தப்பியோடியதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சகாதேவன் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் காரைக்குடி அருகே செல்வது தெரியவந்தது. இதனையடுத்து காரைக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கபால்சாமி, ரவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.