தெலங்கானாவில், பள்ளி மாணவர்கள் வகுப்பு அறையில் குடையைப் பிடித்தப்படி கல்வி கற்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மஞ்சரியல மாவட்டம் கிருஷ்ணப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு மழை நீர் வகுப்பறைகளில் கொட்டுகிறது.
இதனால் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் குடையை பிடித்துக்கொண்டு கல்வி கற்று வருகின்றனர். விபத்து ஏற்படுவதற்கு முன் பள்ளியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.