திருச்சி மாவட்டம், முசிறி அருகே 43 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏலுர்பட்டியை சேர்ந்த தங்கராசு என்பவர் தனது குடும்பத்தினருடன் மாடியில் உறங்கியுள்ளார். அப்போது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்து 43 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இத குறித்து தங்கராசு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.