தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 84 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
நேற்று மாலை வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று பிற்பகல் நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 84 ஆயிரம் கனஅடியாக அதிகரித்திருக்கிறது.
நீர் வரத்து அதிகமாக இருப்பதால், பரிசல்களை இயக்கவும், ஆற்றில் குளிக்கவும், தொடர்ந்து 11-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.