சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கில் இருந்து விலகியுள்ளனர்.
பெண் போலீஸாரை அவதூறாக பேசிய புகாரில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி, அவரது தாயார் கமலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இந்நிலையில், இந்த மனுவை தாங்கள் விசாரிப்பது சரியாக இருக்காது என்பதால், பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.