ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்த பரத் என்பவர் தனது சுற்றுலா வேனில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மூலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேனின் எஞ்சின் பகுதி கரும்புகையுடன் தீப்பிடிக்க தொடங்கியது. இதனை பார்த்த பரத் வாகனத்தை நிறுத்தி உடனடியாக கீழே இறங்கியுள்ளார்.
பின்னர் வேன் முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.