குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக கிரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது