நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே நகைக்கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்கோவில் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி, நகைக்கடை ஒன்றில், நகையை பெற்றுக்கொண்டு வெளியே நிற்கும் தனது தாயாரிடம் காட்டுவதாக கூறி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இது குறித்து கடை உரிமையாளர் புகாரளித்த நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சுப்புலட்சுமியை கைது செய்தனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல கடைகளில் இது போன்று செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.