பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்கு வங்க முதலமைச்சர் வெளிநடப்பு செய்தார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பின்னர் நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும்.
இந்தக் கூட்டத்தில் மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் உட்பட இண்டியா கூட்டணியின் முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிறிது நேரத்திலேயே வெளிநடப்பு செய்தார். நிதி ஆயோக் கூட்டத்தில் பேச தனக்கு 5 நிமிடம் கூட வாய்ப்பளிக்கவில்லை என்றும், தான் பேசிக் கொண்டிருக்கும்போதே மைக் ஆப் செய்யப்பட்டதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.