“நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தன் மூலம் வாக்களித்த தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்” என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி முதல்வர்கள் புறக்கணித்ததுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்,
“தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் எப்போதும் தவறான தகவலை அளித்து வருகிறார்” எனவும், “தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் குழப்பத்தின் உச்சத்தில் உள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.