அனைவரையும் மதிப்பதற்கு மாணவர்கள் கற்று கொள்ள வேண்டும் என முன்னாள் காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு வலியுறுத்தியுள்ளார்.
கோவை – பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணர்வர்களிடையே கலந்துரையாடினார்.
அப்போது பேசிய சைலேந்திர பாபு, பெற்றோரிடம் மாணவர்கள் கேள்விகளை கேட்க வேண்டும், ஏன்? எப்படி? எதற்கு? என்ற 3 மந்திரங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.