சென்னை மாநகரில் 5 ஆயிரத்து 501 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 9 நாட்கள் வழிபாடு செய்யவது என இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில், சென்னையில் வழக்கம்போல விநாயகர் சதுர்த்தி துவக்க நிகழ்ச்சியில் 3 ஊர்வலங்களும், நிறைவு விழாவில் இந்து எழுச்சி பொது நிகழ்ச்சியும் நடத்துவது என்பன உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.