செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் 24 மணி நேர காய்ச்சல் பிரிவில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.